தேசியம்
செய்திகள்

கனடா COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது: துணை பிரதமர்

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் கனடா இப்போது COVID மந்தநிலையின் இறுதி கட்டத்தை எதிர்கொள்கிறது என துணை பிரதமர் Chrystia Freeland தெரிவித்தார்.

கனடியர்கள் இதிலிருந்து கடந்து வருவார்கள் என நிதியமைச்சரான Freeland கூறினார்.

இது பொருளாதாரக் கொந்தளிப்பின் காலம் என திங்கட்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கனடியர்கள் சில சவாலான மாதங்களை எதிர்கொள்வார்கள் எனவும் அமைச்சர் Freeland கூறினார்.

அதேவேளை பெரும்பாலான நுகர்வோரும் வணிகங்களும் மந்தநிலையை எதிர்பார்க்கின்றன என கனடிய மத்திய வங்கி தெரிவிக்கிறது.

பெரும்பாலான நுகர்வோர், வணிகங்கள் மந்தநிலைக்குள் கனடா நுழையும் என எதிர்பார்க்கின்றன என கனடிய மத்திய வங்கியின் புதிய ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தனிமைப்படுத்தப்படும் பிரதமர் Trudeau!

Lankathas Pathmanathan

இரண்டு மாதத்திற்குள் கனடா திரும்பிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் COVID தொற்றால் பாதிப்பு!

Gaya Raja

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Gaya Raja

Leave a Comment