Nova Scotia மாகாணத்தில் இரண்டு வார கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை வெளியானது.
புதன்கிழமை காலை முதல் மாகாண அளவிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலைகளும் அத்தியாவசியமற்ற கடைகளும் மூடப்படவுள்ளன. தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த இரண்டு வாரங்களும் முக்கியமானவை என முதல்வர் Iain Rankin தெரிவித்தார்.