தேசியம்
செய்திகள்

மீண்டும் முகக்கவசங்களை பரிந்துரைக்கும் உயர் மருத்துவர்?

COVID தொற்றை எதிர்கொள்ளும் சிக்கலான குளிர்காலத்திற்கான முகக்கவச பரிந்துரைகளை வழங்கவுள்ளதாக Ontarioவின் உயர் மருத்துவர் தெரிவித்தார்.

கடந்த பல வாரங்களாக Ontario மருத்துவமனையில் தொற்றின் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore தெரிவித்தார்.

தனிப்பட்ட தொடர்பு மூலம் பரவும் தொற்றின் ஆபத்தை குறைக்க முகக்கவசங்களை அணிவது குறித்த பரிந்துரைகளை வழங்கவுள்ளதாக Moore கூறினார்.

இந்த பரிந்துரைகள் பொதுமக்களுக்கானவையே தவிர, எந்தவொரு பொது சுகாதார நடவடிக்கைகளையும் மீண்டும் செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துபவை அல்ல என சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது.

தகுதியுடைய அனைவரையும் Booster தடுப்பூசியை பெறுமாறும் Moore வலியுறுத்தினார்.

கடந்த வாரம் நிலவரப்படி, Ontarioவில் COVID தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மாத உயர்வை எட்டியது.

Related posts

Naziகளுடன் இணைந்து போரிட்டவரை நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் மன்னிப்பு

Lankathas Pathmanathan

இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை அதிகரித்தது கனடா

Lankathas Pathmanathan

கனடாவுக்கான சீன தூதர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment