தேசியம்
செய்திகள்

காவல்துறை அதிகாரி பலியான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த புதிய விவரங்கள்

திங்கட்கிழமை (12) Mississauga நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பலியான காவல்துறை அதிகாரி 48 வயதான Constable Andrew Hong என அடையாளம் காணப்பட்டுள்ளார்

22 வருடங்கள் காவல்துறையில் பணியாயிற்றிய இவர் பலராலும் நினைவு கூறப்படுகிறார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பவம் குறித்த புதிய விவரங்கள் தொடர்ந்தும் வெளிவருகின்றன

காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் பின்னர் Milton நகரில் உள்ள வாகனம் திருத்தும் இடத்தில் மூன்று பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஒருவர் இறந்ததுடன் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் Milton நகரில் உள்ள MK Auto Repairs வாகனம் திருத்தும் இடத்தின் முன்னாள் ஊழியர் என தெரியவருகிறது.

இதுவரை இந்த தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் வெளியாகவில்லை

சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் Hamilton நகரில் சில மணி நேரங்களுக்கு பின்னர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தற்போது சிறப்பு புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Related posts

கனடிய செய்திகள் – September மாதம் 29ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Lankathas Pathmanathan

Leave a Comment