தேசியம்
செய்திகள்

Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரிப்பு

கனடாவில் Monkeypox தொற்றின் தாக்கம் வாரத்திற்கு வாரம் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் Monkeypox தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பொது மக்களுக்கு ஆபத்து குறைவாக உள்ளது என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் தற்போது 477 பேர் Monkeypox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

July 4 முதல் 13 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 177 புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது தொற்றுகளின் எண்ணிக்கையில் 59 சதவீதம் அதிகரிப்பை குறிக்கிறது.

Quebecகில் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் தொற்றுகள் பதிவாகின்றன.

July 13வரை Quebecகில் 211 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

ஆனால் Ontario அனைத்து மாகாணங்களிலும் தொற்றுகளின் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டது.

July 4ஆம் திகதி 77ஆக இருந்த தொற்றுகளின் எண்ணிக்கை இந்த வாரம் 156ஆக அதிகரித்துள்ளது.

British Columbia மாகாணமும் பல வாரங்களில் முதல் முறையாக தொற்றுகளின் அதிகரிப்பை எதிர்கொண்டது.

கடந்த வாரம் 4ஆக இருந்த தொற்றுகளின் எண்ணிக்கை இந்த வாரம் 29 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

Hockey கனடா தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan

COVID தடுப்பூசி எல்லைக் கொள்கையை கைவிட கனடா தீர்மானம்

Lankathas Pathmanathan

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment