தேசியம்
செய்திகள்

ரஷ்ய தூதரக விருந்தில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது: பிரதமர் Trudeau

கடந்த வாரம் Ottawaவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நடந்த விருந்தில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

Ottawaவில் உள்ள தூதரகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ரஷ்ய தின கொண்டாட்டத்தில் கனடிய வெளியுறவு துறையை சேர்ந்த நெறிமுறை அதிகாரியின் துணைத் தலைவர் கலந்து கொண்டார்.

இந்த வரவேற்புக்கு நிகழ்வில் கனேடிய பிரதிநிதியை அனுப்புவதற்கான முடிவு வெளியுறவு துறையினால் எடுக்கப்பட்டதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

இந்த முடிவு குறித்து செவ்வாய்க்கிழமை (14) நாடாளுமன்ற அமர்வின் கேள்வி நேரத்தில்  Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen கேள்வி எழுப்பினார்.
இது ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது என பதிலளித்த Trudeau, நாங்கள் அதை முற்றிலும் கண்டிக்கிறோம் எனவும் கூறினார்.

உக்ரைன் அதிபரிடம் Trudeau மன்னிப்பு கேட்பார் என தான் நம்புவதாகவும் Bergen கூறினார்.

செவ்வாய்க்கிழமை 45 நிமிடங்கள் உக்ரைன் அதிபரிடம்  தொலைபேசியில் உரையாடியதாக கூறிய Trudeau, உக்ரைனுக்கு கனடாவின் ஆதரவை தெரிவித்ததாக கூறினார்.

இந்த நிகழ்வில் கனேடிய பிரதிநிதி கலந்து கொண்டது  ஏற்றுக்கொள்ள முடியாத தவறு என நேற்று கூறிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly, இது போன்ற தவறு மீண்டும் நிகழாது எனவும்  தெரிவித்தார்.

Related posts

மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து TikTok செயலி தடை

Lankathas Pathmanathan

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் அணுவாயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு கனடா தயாராக இருக்க வேண்டும்: வெளிவிவகார அமைச்சர்

Leave a Comment