ரஷ்யா உட்பட்ட நாடுகளிடமிருந்து சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino வியாழக்கிழமை (09) காலை இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இந்த அச்சுறுத்தல் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல் மாகாணங்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் உள்ளது என அமைச்சர் கூறினார்.