தேசியம்
செய்திகள்

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: பிரதமர் Trudeau

மத்திய வங்கி சுதந்திரமாக செயல்படுவதன் அவசியத்தை  Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் புரிந்து கொள்கிறாரா என கனடிய பிரதமர் கேள்வி எழுப்பினார்.
தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கனடிய மத்திய வங்கியின் ஆளுநரை பதவி நீக்கம் செய்வேன் என Conservative கட்சியின் தலைமை வேட்பாளர் Pierre Poilievre தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை (11) இரவு  Edmontonனில் நடைபெற்ற  Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களுக்கு இடையிலான முதலாவது அதிகாரபூர்வ தலைமைத்துவ விவாதத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் கனடிய  பொருளாதார ஸ்திரத்தன்மை, சர்வதேச நற்பெயருக்கு மத்திய வங்கியின் சுதந்திரம் எவ்வளவு அவசியமானது என்பதை Poilievre புரிந்துகொள்கிறாரா என Trudeau கேள்வி எழுப்பினார்.
கனடிய மத்திய வங்கி, உலகின் வலிமையான, மிகவும் நிலையான, புகழ்பெற்ற வங்கிகளில் ஒன்றாகும் எனவும் Trudeau சுட்டிக்காட்டினார்.

Related posts

கனேடிய மத்திய அரசின் புதிய வரவு செலவு திட்டம்: குறையும் பற்றாக்குறை!

Gaya Raja

இஸ்ரேலில் இருந்து இராஜதந்திரிகளின் குழந்தைகளை வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan

துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment