தேசியம்
செய்திகள்

சுதந்திரத் தொடரணியை முடிவுக்குக் கொண்டுவர அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த விசாரணை

சுதந்திரத் தொடரணி என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர  அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை கோரப்பட்டுள்ளது.

சுதந்திரத் தொடரணி trucker போராட்டங்கள், முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது குறித்த தேசிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்த வழிவகுத்த சூழ்நிலைகள், அவசரகாலச் சூழ்நிலையைச் சமாளிக்க அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான ஆணையுடன் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நீதிபதியான Paul S. Rouleau இந்த சுதந்திரமான “பொது ஒழுங்கு அவசர ஆணையத்திற்கு” தலைமை தாங்கவுள்ளார்.

இந்த விசாரணை இந்த ஆண்டு முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

February 20, 2023க்குள் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் நாடாளுமன்றம், மேலவை ஆகியவற்றில் Rouleau தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பார்.

அவசரகாலச் சட்டத்தை செயல்படுத்துவதில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் பொருத்தம், செயல்திறன் குறித்து அவர் எடை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கையில் விசாரணையின் முக்கிய கண்டுபிடிப்புகளும் கற்றுக்கொண்ட பாடங்களும் உள்ளடக்கப்படும்.

இந்த விசாரணையை ஆரம்பிக்க ஆவலுடன் இருப்பதாக Rouleau ஒரு அறிக்கையில் கூறினார்.

Related posts

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

Toronto பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து முகாமை அகற்ற தடை உத்தரவு

Lankathas Pathmanathan

Ontarioவில் 21 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன

Gaya Raja

Leave a Comment