December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவின் தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுகிறது

Ontarioவின் COVID தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பொன்று எதிர்பார்க்கப்படுவதாக மாகாணத்தின் உயர்மட்ட அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

கடந்த வார விடுமுறை காரணமாக இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

ஆனாலும்  இது அடிப்படையில் ஆறாவது அலையின் பாதையை மாற்றாது என எதிர்வு கூறப்படுகின்றது

அடுத்த வார தரவுகள் கடந்த  நீண்ட வார இறுதியில் கூட்டங்களின் தாக்கங்களை பிரதிபலிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

இந்த நிலையில் கனடாவுக்குப் பயணிப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு முகமூடிகளை அணிய வேண்டிய நடைமுறை தொடர்ந்தும் அமுலில் உள்ளது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது

முகமூடி கட்டுப்பாடுகள் உட்பட பெரும்பாலான தொற்று கட்டுப்பாடுகளை மாகாணங்களும் பிரதேசங்களும்
நீக்கியுள்ளன.

ஆனாலும்  கனடாவுக்கு உள்வரும் பயணிகள் இரண்டு வாரங்களுக்கு முகமூடியை அணிய வேண்டும் என மத்திய அரசாங்கம் கோருகிறது.

Related posts

COVID: நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவில் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment