தேசியம்
செய்திகள்

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும்: NACI

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (05) இந்த பரிந்துரையை வெளியிட்டது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட காலப் பராமரிப்பில் உள்ளவர்கள், வரும் வாரங்களில் நான்காவது தடுப்பூசியை பெற மாகாணங்களும் பிராந்தியங்களும் தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது booster தடுப்பூசியை NACI கடுமையாகப் பரிந்துரைத்துள்ளது.

மேலும் First Nations, Metis, Inuit சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டாவது booster வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

March 27 வரை, 18 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் ஏறத்தாழ 90 சதவீதம் பேர் கனடாவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஆனாலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 57 சதவீதம் பேர் booster தடுப்பூசியை பெற்றுள்ளனர் என கனடாவின் பொது சுகாதார முகமையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதியில் மேலும் கல்லறைகள்?

நெடுஞ்சாலை 401 விபத்தில் நான்கு பேர் மரணம்

Lankathas Pathmanathan

மீண்டும் திறக்கும் திட்டத்தை காலவரையின்றி இடைநிறுத்திய Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment