தேசியம்
செய்திகள்

மீண்டும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ள John Tory

தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக John Tory வெள்ளிக்கிழமை (25) அறிவித்தார்.
எதிர்வரும் October மாதம் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை வெள்ளியன்று Tory வெளியிட்டார்.
67 வயதான Tory,  2014ஆம் அண்டு முதல் தடவையாக Toronto நகர முதல்வராக தெரிவானார்.
இரண்டு தடவைகள் மாத்திரமே நகர முதல்வர் பதவியில் இருக்க விரும்புவதாக முதலில் தெரிவித்த அவர், அண்மைய காலங்களில் மூன்றாவது தடவையாக தேர்தலில் ஈடுபடும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
Torontoவை வழிநடத்துவதை விரும்புவதாகவும், நகரத்தின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னேற விரும்புவதாகவும் Tory கூறினார்.

தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட பணிகளை தொடர்வதே மீண்டும் தேர்தலை நாடுவதற்கான காரணம் என Tory தெரிவித்தார்.

Related posts

முதற்குடியினர் அனுபவித்த வன்முறை மீண்டும் நிகழாத எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன்: திருத்தந்தை பிரான்சிஸ்

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

Leave a Comment