தேசியம்
செய்திகள்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உலக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்: கனடிய வெளியுறவு அமைச்சர்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பாக ரஷ்யா மீது கனடா விரைவில் புதிய தடைகளை விதிக்கும் என வெளியுறவு அமைச்சர் Melanie Joly திங்கட்கிழமை (21) தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் Vladimir Putin மீதும், அவரது நெருங்கிய காவலர்கள் மீதும், தன்னலக்குழுக்கள் மீதும் அதிகபட்ச அழுத்தம் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறிய அமைச்சர் Joly, அதுவே கனடாவின் இலக்கு என தெரிவித்தார்.
உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் அதே வேளையில், ரஷ்யா இராஜதந்திர ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய கனடா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் எனவும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி Putinனை ஆபத்தானவர் என கூறிய Joly, உக்ரைன் மீதான அவரது படையெடுப்பு உலக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தார்
 உக்ரைனின் படையெடுப்பு புவிசார் அரசியலை  தலைகீழாக மாற்றியது என தெரிவித்த Joly, இந்த படையெடுப்பு மேற்கத்திய நாடுகள் தங்கள் இராணுவ செலவினங்களை மறுமதிப்பீடு செய்ய தூண்டியது எனவும் கூறினார்

Related posts

Carbon வரி உயர்வு குறித்து அவசர நாடாளுமன்ற விவாதம் இல்லை!

Lankathas Pathmanathan

சிறப்பு காவல்துறை அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை Ontario தாண்டியது!!

Gaya Raja

Leave a Comment