தேசியம்
செய்திகள்

தற்காலிகமாக புலம்பெயரும் உக்ரேனியர்கள் மூன்று ஆண்டுகள்  தங்கியிருக்க முடியும்

தற்காலிகமாக புலம்பெயரும் உக்ரேனியர்கள் கனடாவில் மூன்று ஆண்டுகள்  தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தற்காலிகமாக கனடாவிற்கு வர விரும்பும் உக்ரைனியர்கள் மூன்று ஆண்டுகள் தங்கியிருக்க முடியும் என கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர்  Sean Fraser இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டார்

இன்று ஆரம்பமான கனடா-உக்ரைன் அவசர பயணத்திற்கான அங்கீகார திட்டத்தின் மூலம், கனடா வருபவர்கள் முன்னர் அறிவிக்கப்பட்ட இரண்டு வருடங்களை விட நீண்ட காலம் தங்க முடியும் என் அறிவிக்கப்படுகின்றது.

இந்த தற்காலிக குடியிருப்பு நடைமுறை வழியாக விண்ணப்பிப்பவர்கள் இணையம் மூலம் அங்கீகரிக்கப்படுவதற்கு சராசரியாக இரண்டு வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இந்தப் புதிய திட்டத்தின் மூலம் கனடாவுக்கு வருகை தருபவர்கள் ஒவ்வொருவரும் பணி அனுமதி அல்லது கல்வி அனுமதிக்கு தகுதியுடையவர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

புதிய குளிர் காய்ச்சல் தடுப்பூசி ஒப்பந்தம்

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

Leave a Comment