தேசியம்
செய்திகள்

Ambassador பாலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும்  முயற்சி முறியடிப்பு

Ambassador பாலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும்  முயற்சியொன்று Windsor காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது.
எல்லைக் கடப்பை அடைவதற்கு முன்னர் இந்த முயற்சி  முறியடிக்கப்பட்டதாக Windsor நகர முதல்வர் Drew Dilkens கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் Ottawaவில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வாகனம் பேரணி ஒன்று Windsorரை அடைவதற்கு முன்பு இடை நிறுத்தப்பட்டதாக Windsor காவல்துறை தலைவர் Pam Mizunoமி தெரிவித்தார்.
இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆபத்து தொடர்ந்து உள்ளது என Mizuno கூறுகிறார்.
Ambassador பாலத்தின் முற்றுகை காரணமாக மொத்தம் 90 குற்றச்சாட்டுகள் பதிவானதுடன், 46 கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலையில் – 19 வயது இலங்கையர் கைது !

Lankathas Pathmanathan

Ontario மாகாண Liberal கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment