தேசியம்
செய்திகள்

COVID நடவடிக்கைகளில் மாற்றங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

கனடாவின் எல்லைகளில் COVID தொற்று நடவடிக்கைகளில் மாற்றங்களை மத்திய அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை (11) இந்த தகவலை  வெளியிட்டார்.

அத்தியாவசியமற்ற அனைத்து சர்வதேச பயணங்களையும் தவிர்க்குமாறு தற்போது அரசாங்கம்  அறிவுறுத்துகிறது.

இந்த நிலையில் தொற்றை நிர்வகிப்பதற்கான நிலையான திட்டங்களை எதிர்பார்ப்பதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

COVID காரணமாக சராசரியாக நாளாந்தம் 130 மரணங்கள் கனடாவில் பதிவாகின்றன.

ஒவ்வொரு நாளும் சுமார் 8,700 பேர் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தவிரவும் 1,000 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  என கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

Related posts

Ontario குடியிருப்பு பாடசாலையில் 171 சாத்தியமான மனித எச்சங்கள்

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

Gaya Raja

மனநல நெருக்கடியை எதிர் கொள்பவர்களுக்கு அவசர உதவி இலக்கம் அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment