உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.
ரஷ்யாவின் ஊடுருவல் அச்சுறுத்தலை உக்ரைன் எதிர்கொள்ளும் நிலையில், உக்ரைனுக்கான கூடுதல் கனேடிய ஆதரவு குறித்த விவரங்களை மிக விரைவில் வெளியிட முடியும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்
உக்ரைனுக்கு 120 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதாக கனடா உறுதியளிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னர் அமைச்சர் ஆனந்தின் கருத்துக்கள் வெளியாகின
உக்ரைனுக்கு மேலும் உதவுவதற்காக பிற வழிகளை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதமர் வெள்ளிகிழமை (21) அறிவித்தார்.