தேசியம்
செய்திகள்

தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

கனடியத் தமிழர்களின் தொடர் பங்களிப்பிற்கு பிரதமர் Justin Trudeau நன்றி தெரிவித்தார்.

திங்கட்கிழமை (17) நடைபெற்ற தைப்பொங்கல், தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்.

தமிழ்க் கனடியர்கள் இந்த நாட்டின் சமூக, பொருளாதார, பண்பாட்டு துறையில் வழங்கும், பங்களிப்பிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

மெய்நிகர் வழியாக நடைபெற்ற இந்த நிகழ்வை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வில் தமிழரான பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், Toronto நகர முதல்வர் John Tory,, நகரசபை உறுப்பினர்கள், தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கனேடிய இராணுவ செலவினங்களை பிரதமர் நியாயப்படுத்தினார்

கனடாவில் வேகமாக பரவும் COVID தொற்றின் புதிய திரிபு

Lankathas Pathmanathan

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja

Leave a Comment