தேசியம்
செய்திகள்

கனடா ஒரு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையிலான தினசரி தொற்றுக்களை பதிவு செய்யும் நிலை

கனடாவில் Omicron திரிபு விரைவில் உச்சத்தை அடையலாம் என தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

இதன் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அவர் எச்சரிக்கிறார்.

புதிதாக வெளியாகியுள்ள modelling தரவுகள் Omicron மாறுபாட்டின் மிகப்பெரும் எழுச்சியை இந்த மாதம் எதிர்வு கூறுகின்றது என Tam தெரிவித்தார்.

ஆனால் அடுத்த மாதம் Omicron திரிபின் பரவல் குறைவடையும் எனவும் Dr. Tam தெரிவித்தார்.

கனடா ஒரு இலட்சம் முதல் இரண்டரை இலட்சம் வரையிலான தினசரி தொற்றுக்களை பதிவு செய்யும் நிலையில் உள்ளது என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வெள்ளிக்கிழமை (14) வெளியிட்ட modelling தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் சராசரியாக, கடந்த ஏழு நாட்களில், 6,779 நோயாளிகள் COVID தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 883 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர்

மேலும் 82 பேர் இறந்துள்ளனர்.

Related posts

தொற்றின் காரணமாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

Lankathas Pathmanathan

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

Lankathas Pathmanathan

Leave a Comment