Omicron பரவலால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதம் குறித்து கனடா Post எச்சரிக்கிறது.
ஊழியர்களின் பற்றாக்குறைகளை கனடா Post கையாள்வதால், கனடியர்கள் அடுத்த சில வாரங்களில் விநியோக தாமதங்களை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
வேகமாக மாறிவரும் சூழ்நிலை காரணமாக இந்த நிலை எதிர் கொள்ளப்படுவதாக கனடா Post தெரிவிக்கின்றது.
தேவையான இடங்களில் தற்காலிக திட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், கனேடியர்களுக்கு சேவை செய்யும் செயல்பாடுகளை சரி செய்வதாக ஒரு அறிக்கையில் கனடா Post குறிப்பிட்டுள்ளது.
Purolator நிறுவனமும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது.