தேசியம்
செய்திகள்

January இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகள் கனடாவை வந்தடையும்

140 மில்லியன் விரைவு சோதனைகள் இந்த மாத இறுதிக்குள் கனடாவை வந்தடைய உள்ளன.

COVID பதில் நடவடிக்கை குறித்து மத்திய அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (05) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

கனடாவை வந்தடைய உள்ள 140 மில்லியன் விரைவான சோதனைகள், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவைப்பட்டால், ஒரு வாரத்திற்கு ஒரு பரிசோதனையை ஒரு மாதத்திற்கு எடுக்க போதுமானது என பிரதமர் கூறினார்.

இவை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் தனிநபர் அடிப்படையில் பிரிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் கடந்த மாதம் விரைவான சோதனைகளுக்கான மாகாணங்களதும் பிரதேசங்களினதும் கோரிக்கையை மத்திய அரசாங்கம் நான்கு மடங்கு வழங்கும் என அவர் தெரிவித்தார்.

முதல், இரண்டாவது அல்லது booster தடுப்பூசிகளை பெற தகுதியுடைய அனைத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு போதுமான COVID தடுப்பூசிகள் இப்போது கனடாவில் உள்ளன என்பதையும் Trudeau செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மீது கனேடியர்கள் கோபமடைந்து விரக்தியடைந்து உள்ளதாகவும் பிரதமர் Trudeau  தெரிவித்தார்.

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 12 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களில் 87 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

அதேவேளை கனடாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான இரண்டாவது தடுப்பூசிகள் இந்த மாதம் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் எனவும்  பிரதமரினால் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், January இறுதிக்குள் தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு தடுப்பூசிகளையும் பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார்.

Related posts

AstraZeneca தடுப்பூசிகள் குறித்து பிரதமரின் தவறான தகவல்

Lankathas Pathmanathan

அவசர அழைப்புக்கு பதிலளிக்காத காவல்துறை – 21 வயது பெண் மரணம்!

Lankathas Pathmanathan

மீண்டும் திறப்பதை நோக்கிய நகர்த்தலின் முதல் அளவுகோலை Ontario தாண்டியது!!

Gaya Raja

Leave a Comment