தேசியம்
செய்திகள்

தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்தில் 45 சதவீதம் அதிகரித்தது  

கனடாவின் தினசரி COVID தொற்றின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் இருந்ததை விட இந்த வாரம் 45 சதவீதம்  அதிகரித்துள்ளது.
Omicron திரிபின் அதிகரிப்புக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு பதிவானது.

கனடாவில் கடந்த வாரத்தில் தினமும் சராசரியாக 5,000க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவானதாக தலைமை பொது சுகாதார அதிகாரி Theresa Tam தெரிவித்தார்.

COVID தொற்றுகளை தவிர, Omicron திரிபின் அதிகரிப்பையும் கனடா எதிர்கொள்கிறது.

புதிய தரவுகளின் படி  11 மாகாணங்களிலும் பிரதேசங்களிலும்  கூட்டாக 350 Omicron திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Tam உறுதிப்படுத்தினார்.

அதிகரித்து வரும் இந்த தொற்றுகள் பயணத்துடன் தொடர்புடையவையல்ல என அவர் எச்சரித்தார்.

இதன் மூலம் Omicron திரிபின் சமூகப் பரவல்  நாட்டின் பல பகுதிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

AstraZeneca தடுப்பூசியை பெற்றவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்க Quebec தயார்!

Gaya Raja

மீண்டும் 300க்கும் அதிகமான தொற்றுக்கள் Ontarioவில்!

Gaya Raja

2024 Paris Olympics: இருபது பதக்கத்தை அண்மிக்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment