தேசியம்
செய்திகள்

தனது தலைமையை கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினரை குறிவைக்கும் Erin O’Toole

தனது தலைமைக்கு எதிராக குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தை Conservative கட்சித் தலைவர் Erin O’Toole கோரியுள்ளார்.

Alberta நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs தனது ஊழியர்களுக்கு நச்சுப் பணி சூழலை உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டதாக O’Toole கூறினார்.

திங்கட்கிழமை (06) Quebec மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்த போது, முதன் முதலில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்ததாக O’Toole கூறினார்.
ஆனாலும் O’Tooleலில் இந்த நடவடிக்கை ஏனைய Conservative உறுப்பினர்களை Alberta நாடாளுமன்ற உறுப்பினரை பாதுகாக்கத் தூண்டியது.

தான் எந்த தவறும் செய்யவில்லை என மறுத்த Stubbs, O’Tooleலின் தலைமையை மறுபரிசீலனை செய்ய கோரியதற்கு தான் இலக்கு வைக்கப்பட்டதாக கூறினார்.

கடந்த September மாதம் நடைபெற்ற தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து Conservative கட்சியின் தலைமையை மறுபரிசீலனை செய்ய Stubbs அழைப்பு விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் ஆயிரத்தை தாண்டிய குரங்கு காய்ச்சல் தொற்றாளர்கள்

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja

குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசி கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment