தேசியம்
செய்திகள்

பயணிகள் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது

கனடியப் பயணிகள் மீண்டும் கனடாவுக்குள் நுழைவதற்கு ArriveCAN செயலி கட்டாயமானது என கனடிய அரசாங்கம் நினைவூட்டுகிறது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த நினைவூட்டலை வெளியிட்டார். தடுப்பூசி போடப்பட்ட கனடியர்கள் ArriveCAN செயலியை உபயோகிக்காத நிலையில் தனிமைப் படுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதாக கனடா-அமெரிக்க நில எல்லையில் ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாக இந்த நினைவூட்டல் வெளியானது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனடியர்கள் 72 மணி நேரத்திற்கு குறைவாக பயணம் மேற்கொண்ட பின்னர் மீண்டும்  நாட்டிற்குள் நுழையும் போது எதிர்மறையான PCR சோதனையை வழங்கத் தேவையில்லை என கடந்த மாதம் விதிகள் மாற்றப்பட்டன.

இருப்பினும், பயணிகள் கனடாவுக்கு வருவதற்கு முன் ArriveCAN செயலியில் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம், பயணத் திகதி, தனிமைப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளிட்ட கட்டாயத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கும் தொற்றுக்களுக்கு மத்தியில் Manitobaவில் மேலும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Gaya Raja

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளின் இறுதி நிகழ்வு

Lankathas Pathmanathan

Leave a Comment