தேசியம்
செய்திகள்

பண மோசடி விசாரணைக் குழுவினால் கனடாவில் குற்றச் சாட்டப்பட்டுள்ள தமிழர்

RCMPயின் ஒருங்கிணைந்த பண மோசடி விசாரணைக் குழு தமிழரான பண பரிமாற்ற சேவைகள் வணிக உரிமையாளர் மீது குற்றச் சாட்டுக்களை பதிவு செய்துள்ளது.

Markham நகரைச் சேர்ந்த 38 வயதான நிஷாந்தன் குணபாலன் மீது இந்தக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

இவர் சாயீசன் துரித பணப்பரிமாற்றச்  சேவை என்னும் நிறுவனத்தை Markham & Steeles சந்திப்புக்கு அருகாமையில் நடத்தி வருகின்றார்.

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு தவறான தகவல்களை தெரிந்தே வழங்கியதாக 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகியுள்ளது.

குற்றச்சாட்டப்பட்டுள்ள நிஷாந்தன்  குணபாலன், அடுத்த மாதம் 16ஆம் திகதி தன் மீதான குற்றச்சாட்டை எதிர் கொள்ளவுள்ளார்.

Related posts

இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து கனடிய துணை பிரதமர் ஆலோசனை

Lankathas Pathmanathan

Manitobaவில் புதிய பொது சுகாதார உத்தரவுகள்

Gaya Raja

COVID-19 பேரிடர் காலத்தில் பேருதவி: முன் மாதிரியாக கனடாவில் Inforce Foundation

thesiyam

Leave a Comment