தேசியம்
செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் Manitobaவில் booster தடுப்பூசிக்கு தகுதி

Manitobaவில் அனைத்து பெரியவர்களும் COVID booster தடுப்பூசிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் அனைவரையும் booster தடுப்பூசியை பெற Manitoba அனுமதிப்பதாக இன்று அறிவிக்கப்பட்டது.

Health கனடா 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் Pfizer booster தடுப்பூசியை அங்கீகரித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த முடிவு வந்துள்ளது.

மிகக் குறைந்த சூழ்நிலைகளைத் தவிர, இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளுக்கு இடையே குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தேவையாகும்.

Booster தடுப்பூசிகளை முதலில் பெற மருத்துவரிடம் இருந்து மருந்துச்சீட்டு தேவைப்படும் என Manitobaவில் உள்ள தடுப்பூசி செயல்படுத்தும் பணிக்குழுவின் தலைவரான வைத்தியர் Joss Reimer தெரிவித்தார்.

Manitoba வரும் வாரங்களில் Janssen தடுப்பூசியின் ஏற்றுமதியைப் பெறவுள்ளது.

Related posts

Washington பயணமாகும் Justin Trudeau!

Lankathas Pathmanathan

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

Lankathas Pathmanathan

மீண்டும் நான்கு வார காலம் முடக்கப்படும் Ontario !

Gaya Raja

Leave a Comment