தேசியம்
செய்திகள்

Albertaவில் அதிகரிக்கும் தொற்று மரணங்கள்!

Albertaவில் வியாழக்கிழமை COVID தொற்று தொடர்பான 30 மரணங்கள் பதிவாகின.

வியாழனன்று 916 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

வியாழக்கிழமை பதிவான இறப்புகள் October 7 முதல் 13 வரை நிகழ்ந்தவை எனவும் மரணமடைந்தவர்கள்  பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடவில்லை எனவும் மாகாண சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Deena Hinshaw கூறினார்.

சமீபத்தில் Alberta எதிர்கொள்ளும்  அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் விரைவான தொற்றின் பரவலின் விளைவாகும் எனவும் அவர் கூறினார்.

வியாழனன்று நாடளாவிய ரீதியில் 3,142 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

Related posts

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற முன்னாள் கனடிய தமிழர்

Lankathas Pathmanathan

Leave a Comment