Alberta மருத்துவமனைகளில் எதிர்கொள்ளப்படும் கொடூரமான நிலையை பார்வையிட வருமாறு முதல்வருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அவசர அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
Alberta மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட கடிதமொன்றில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Albertaவில் கடந்த பல வாரங்களாக நாளாந்த தொற்று எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
செவ்வாய்க்கிழமை 663 தொற்றுக்களை மாத்திரம் Albertaவில் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்திருந்தாலும் 26 புதிய மரணங்கள் பதிவாகின.