தேசியம்
செய்திகள்

உடல்நலக் காரணங்களுக்காகவே இரண்டு கனேடியர்களும் விடுவிக்கப்பட்டனர்: சீனா தகவல் 

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்கள் உடல்நலக் காரணங்களுக்காக கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர் என திங்களன்று சீனா அறிவித்தது.

December மாதம் 10ஆம் திகதி 2019ஆம் ஆண்டு முதல் Michael Spavor மற்றும் Michael Kovrig ஆகியோர்  உளவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சீனாவின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த கால கட்டத்தில் Huawei நிர்வாக அதிகாரி Meng Wanzhou கனடாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பல நாடுகள் சீனாவின் நடவடிக்கையை பணயக்கைதிகள் அரசியல் என விமர்ச்சித்தன.

மாறாக Huawei நிர்வாக அதிகாரியை கனடா தன்னிச்சையாக தடுத்து வைத்ததாக  சீனா குற்றம் சாட்டியது.

இந்த நிலையில்  Wanzhouக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கனடா கைவிட்ட சில மணிநேரத்தில் இரண்டு கனடியர்களும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்..

சீனாவுக்கான  கனடாவின் தூதர் Dominic Bartonனுடன் விடுதலை செய்யப்பட்ட கனடியர்கள் இருவரும் விமானமொன்றில் சீனாவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலையில் Calgary சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் இருவரையும் பிரதமர் Justin Trudeau விமான நிலையத்தில் நேரடியாக சென்று வரவேற்றிருந்தார்.

ஆனாலும் இந்த இரண்டு வழக்குகளும்  வேறுபட்டது என திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனாவின்   வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Related posts

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan

கர்தினலுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு போதிய ஆதாரம் இல்லை: திருத்தந்தை

Lankathas Pathmanathan

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan

Leave a Comment