September 23, 2026
தேசியம்
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும்  விடுதலை! 

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு  கனேடியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1,000 நாட்களுக்கு மேலாக சிறை தண்டனை எதிர்க்கொண்ட Michael Kovrig மற்றும்  Michael Spavor ஆகியோர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த  கனேடியர்களை சீனா விடுவித்துள்ளது என்று பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை இரவு உறுதிப்படுத்தினார்.

Huawei நிர்வாக அதிகாரி Meng Wanzhouக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவை கனடா கைவிட்ட நிலையில் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கனேடியர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கான  கனடாவின் தூதர் Dominic Bartonனுடன் விடுதலை செய்யப்பட்ட கனடியர்கள் இருவரும் விமானமொன்றில் சீனாவில் இருந்து புறப்பட்டு விட்டதாக வெள்ளிக்கிழமை பின்னிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Trudeau கூறினார்

Related posts

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

Gaya Raja

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் பயன்பாட்டை மதிப்பாய்வு செய்யும் Health கனடா

Gaya Raja

Johnson & Johnson தடுப்பூசி 30 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: NACI பரிந்துரை

Gaya Raja

Leave a Comment