December 12, 2024
தேசியம்
உள் உணர்ந்துகட்டுரைகள்

வெல்லப்போவது யார்?

கனேடிய பொதுத் தேர்தல் களம் COVID-19 தொற்றின் வசம் சிக்குண்டுள்ளது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் தொற்று, அரசியல் நிலப்பரப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சில வாரங்களில் மற்றொரு வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், தொற்று மீட்புத் திட்டங்களுக்கான புகழை தம்பக்கம் பெற்றுக்கொள்ள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Jagmeet Singh தலைமையிலான NDP, சிறுபான்மை Liberal அரசாங்கத்தை அதிக கனேடியர்களுக்கு அதிக நிதியுதவியை வழங்கத் தூண்டியது என்கின்றன புதிய ஜனநாயகக் கட்சியினரின் பிரச்சாரச் செய்திகள். Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கத்தை முதலில் திட்டமிட்டதை விட அதிக அளவில் உதவிகளை வழங்க கட்டாயப்படுத்தியதாக தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய விளம்பரம் ஒன்றில் NPD உரிமை கோரியது. மறுபுறம் Conservative கட்சியோ தொற்று மீட்புத் திட்டங்களைச் சமநிலை படுத்தியது தனது திறன் என உரிமை கோருகின்றது,

ஆனாலும் COVID மீட்பைத் தாண்டியும் இந்தத் தேர்தலில் கனேடியர்கள் கவனம் செலுத்தும் விடயங்கள் பல உள்ளன.

கட்டாய தடுப்பூசிகள், அவசரகால தயார்நிலை போன்றவை COVID மீட்பு நடவடிக்கைக்குள் அடைங்கிவிடும். ஆனாலும் இவற்றைத் தாண்டியும் பல விடயங்கள் உள்ளன. குழந்தை பராமரிப்பு, பருவநிலை மாற்றம், வெளியுறவுக் கொள்கை, சுகாதார பராமரிப்பு, வீட்டுவசதி, முதற்குடிகளுக்கான உள்நாட்டு சேவைகள், தொழில் வாய்ப்பு, நீண்ட கால பராமரிப்பு, இன சமத்துவமின்மை, நல்லிணக்கம், மூத்தவர் நலன்கள், சிறு வணிகம் என்பன இவற்றில் சில.

இவை அனைத்திலும் ஒவ்வொரு கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கான பதிலே அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதா இல்லையா என்ற விடையாக அமைய வேண்டும். ஆனாலும் வாக்காளர்கள் அனைவரும் அவ்வாறு தமது வாக்குகளை வழங்குதல் என்பது ஒன்றும் புதிய செய்தியாக எவருக்கும் இருக்கப் போவதில்லை.

ஆறு பிரதான கட்சிகள் கனடாவில் இருந்தாலும் முன்னர் பல தடவைகள் போல இம்முறையும் தேர்தல் போட்டி Conservative கட்சிக்கும் (Erin O’Toole), Liberal கட்சிக்கும் (Justin Trudeau) இடையில் தான்.

இவர்கள் இருவரில் கனேடியர்கள் யாரை வெல்ல வைப்பார்கள்?

2021 September மாத தேசியம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம்

Related posts

முழு சூரிய கிரகணம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

Lankathas Pathmanathan

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment