தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

Olivia Chow: Toronto நகரசபையில் அரசியல் மாற்றம்?

Toronto நகரசபையில் ஒரு பெரும் அரசியல் மாற்றம் ஏற்படுகிறது.

திங்கட்கிழமை (26) நடைபெற்ற Toronto நகர முதல்வர் இடைதேர்தலில் Olivia Chow வெற்றி பெற்றார்.  தேர்தலின் மூலம், Olivia Chow இனம், பாலின தடைகளை அவர் முறியடித்தார்.

13 வயது குடியேற்றவாசியாக கனடா வந்த பெண் ஒருவர், Torontoவின் முதல் சீன-கனேடிய நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது 13ஆவது வயதில் Hong Kongகில் இருந்து அவர் கனடா வந்தடைந்தவர்.

Torontoவின் 66ஆவது நகர முதல்வராகிறார் Olivia Chow. 2014இல் Toronto நகர முதல்வர் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த பின்னர், Olivia Chow இம்முறை அரசியல் மறுபிரவேசத்தை நிறைவு செய்தார். 66 வயதான Olivia Chow, மொத்தம் 101 போட்டியாளர்களை தாண்டி இம்முறை வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் Olivia Chow நம்பிக்கையின் செய்தியைக் கொண்டு வந்தார். Toronto நகருக்கு மாற்றத்திற்கான விருப்பத்தை தனது பிரச்சாரமாக மாற்றினார். Torontoவின் முதல் சீன-கனடிய நகர முதல்வாராகின்றார் Olivia Chow.

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 55.7 சதவீத Toronto வாசிகள் சிறுபான்மையினராக உள்ளனர். நகரத்தின் மக்கள் தொகையில் 46.6 சதவீதம் பேர் கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.

இவரது வெற்றியை முன்னேற்றத்தின் பிரதிபலிப்பாகும் என பலரும் நோக்குகின்றனர்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர முதல்வர் முன்னர் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், Toronto நகர சபை உறுப்பினர், பாடசாலை வாரிய அறங்காவலர் ஆகிய பதவிகளை முன்னர் வகித்தவர்.  Olivia Chow 1985 இல்  தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். அது Toronto பாடசாலை வாரிய அறங்காவலர் பதவியாகும். 1991இல், Metro Toronto நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியா பெண்மணி ஆனார். பின்னர், 2006 முதல் 2014 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

Torontoவின் நகர முதல்வராக பதவி வகிக்கும் மூன்றாவது பெண் Olivia Chow ஆவார். இவர் Toronto நகரின் நவீன வரலாற்றில் நகர முதல்வராக தெரிவான சிறுபான்மை முதல் நபராவார். David Millerருக்குப் பின்னர் Toronto தெரிவு செய்த முற்போக்கான முதல் நகர முதல்வர் இவராவார்.

முற்போக்கு அரசியல்வாதியான Olivia Chow, குறைந்த சொத்து வரி அதிகரிப்பு (low property taxes increase), கட்டுப்படி விலையில் புதிய வீடுகள் (affordable housing) ஆகியவற்றை தனது தேர்தல் பிரச்சாரத்தில் வலியுறுத்தினார்.

முன்னாள் நகர முதல்வர் Ana Bailão இந்த தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இவர் சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் Olivia Chowவிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் 37 சதவீதம் வரையிலான வாக்குகளை Olivia Chow, 32 சதவீதமான வாக்குகளை Ana Bailao பெற்றனர். இம்முறை தேர்தலில் 30 சதவீதம் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Toronto நகருக்கு அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்க Olivia Chowக்கு ஒரு வாய்ப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

 

*Ramya Sethu, LJI Reporter

Related posts

விசித்திரப் பையனுக்கு விபரீத முடிவு!

Gaya Raja

கனடாவின் அதிக செலவு செய்யப்படும் தேர்தல்!

Gaya Raja

“அப்புவும் ஒரு ஆள் எண்டு நாய் குரைக்குதோ..?”

Lankathas Pathmanathan

Leave a Comment