தடுப்பூசி பெற்ற நிலையின் அடிப்படையில் சர்வதேச பயணிகளை பிரிக்க கடந்த வாரம் எடுத்த முடிவை Toronto Pearson விமான நிலையம் மாற்றியுள்ளது.
சுங்கச்சாவடிகளுக்கு செல்வதற்கு முன்னர் வருகையாளர்களை தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் தடுப்பூசி பெறாதவர்கள் என்ற வரிசைகளாக பிரிக்க Pearson விமான நிலையம் முதலில் முடிவெடுத்திருந்தது.
தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத அல்லது பகுதியாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வெவ்வேறு நுழைவுத் தேவைகள் இருந்ததால், எல்லை அனுமதியை சீராக்க உதவும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்தது.
அந்த முடிவு இப்போது மாற்றப்பட்டுள்ளது என விமான நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. Vancouver சர்வதேச விமான நிலையமும் இந்த நடைமுறையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத அல்லது பகுதியாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை சுங்கச்சாவடிகளில் பிரிப்பது குறைந்த செயல்பாட்டு செயல்திறனை விளைவிக்கும் என தீர்மானித்துள்ளதாக Toronto Pearson விமான நிலைய அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.