தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் 1.3 மில்லியன் கனேடியர்கள் முதலாவதாக பெற்றதை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றனர்

குறைந்தது 1.3 மில்லியன் கனேடியர்கள் June மாதத்தில் முதலாவதாக பெற்ற COVID  தடுப்பூசியை விட வேறு ஒரு தடுப்பூசியை இரண்டாவதாக பெற்றுள்ளனர்.

குறைந்தது 1.3 மில்லியன் கனேடியர்கள் June  மாதத்தில் தங்கள் தடுப்பூசிகளை கலப்பு அளவில் பெற்றுள்ளதை Health  கனடா உறுதிப்படுத்துகின்றது. May 31 முதல் June  26 வரை சுமார் 6.5 மில்லியன் கனேடியர்கள் தங்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றனர். இவர்களில் ஐந்தில் ஒருவர் முதல் பெற்ற தடுப்பூசியை விட வேறு ஒரு தடுப்பூசியை தமது  இரண்டாவது தடுப்பூசியாக பெற்றனர்.

நாடளாவிய ரீதியில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 78 சதவீதமானவர்கள் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். 42 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முழுமையாக  தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

Related posts

மூன்றாவது தவணையாக Toronto நகர முதல்வராகும் Tory

Lankathas Pathmanathan

பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் மாகாண முதல்வர்கள்

Lankathas Pathmanathan

Carolyn Parrish vs Dipika Damerla: Mississauga நகரின் அடுத்த முதல்வர் யார்?

Lankathas Pathmanathan

Leave a Comment