December 12, 2024
தேசியம்
செய்திகள்

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

வதிவிட பாடசாலைகளில் தொடர்ந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் 1,000 கல்லறைகள் வரை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்ய நாடு முழுவதும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

Hashtag CancelCanadaDay என்ற கோசத்தின் கீழ் முதற் குடியினருக்கு ஆதரவான பல பேரணிகள் British Columbia, Alberta, Ontario, Manitoba ஆகிய மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல நகரங்களும் கனடா தின கொண்டாட்டங்களை தள்ளி வைக்கின்றன.

இந்த ஆண்டு நிகழ்ச்சிகளை இரத்து செய்த முதல் நகரமாக British Colombia மாகாணத்தின் Victoria அமைந்திருந்தது.

Related posts

செய்திகளை கட்டுப்படுத்தும் Google முடிவு தவறானது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Toronto காவல்துறைத்கு புதிய தலைவர் நியமனம்

Lankathas Pathmanathan

FIFA உலகக் கோப்பை போட்டியின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி

Lankathas Pathmanathan

Leave a Comment