Ontario மாகாணம் June மாதம் 16ஆம் திகதி மாகாண எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் Manitobaவில் இருந்தும் Quebecகில் இருந்தும் மீண்டும் Ontarioவுக்கு சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன. புதன்கிழமை அதிகாலை 12:01 மணி முதல், பயணத்தை அத்தியாவசியமாக கருத வேண்டிய அவசியமின்றி மக்கள் நில எல்லைகள் ஊடாகவும் நீர் எல்லைகள் வழியாகவும் Ontarioவிற்குள் நுழைய முடியும்.
Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams கட்டுப்பாடுகளை நீக்க ஒப்புதல் அளித்ததாக Solicitor General Sylvia Jones திங்கட்கிழமை தெரிவித்தார்.