December 12, 2024
தேசியம்
செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று!

London Ontarioவில் முஸ்லிம் குடும்பம் மீதான  தாக்குதலில் பலியானவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்வு செவ்வாய் இரவு London முஸ்லிம் மசூதியில் நடைபெற்றது.  

இந்த விழிப்பு நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு பலியானவர்களை நினைவு கூர்ந்தனர்.

உங்கள் சமூகத்தில், உங்கள் நாட்டில் வெறுப்பை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை என இந்த நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றிய பிரதமர்  Justin Trudeau கூறினார்.

கனடாவில் வெறுப்பைக் கையாள்வதற்கு கட்சித் தலைவர்கள் அரசியலை ஒதுக்கி வைத்து செயல்பட வேண்டும் என Conservative கட்சியின்  Erin O’Toole தனது உரையில் குறிப்பிட்டார். 

நாங்கள் பயங்கரவாதத்தை வெல்ல விடமாட்டோம் என  NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.
இந்த தாக்குதலுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான குரலாக இருக்க விரும்புவதாக பசுமை கட்சியின் தலைவி Annamie Paul தெரிவித்தார்.
Ontario முதல்வர் Doug Ford உம் இந்த நிகழ்வில் உரையாற்றினார். அவர் இந்த தாக்குதலை  பயங்கரவாதம் மற்றும் வெறுக்கத்தக்க குற்றம் என வர்ணித்தார்.

இந்த விழிப்பு நிகழ்வில் பொதுமக்கள் கூடுவதை அனுமதிக்க Londonனில் அமுலில் இருந்த COVID கட்டுப்பாடுகளை மாகாண அரசாங்கம் தளர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Lankathas Pathmanathan

NDP தலைமை வேட்பாளரான தமிழர் போட்டியிலிருந்து விலத்தப்படலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment