தேசியம்
செய்திகள்

அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்

அமெரிக்காவுடன் எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கை நாட்டின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து குறைந்து வந்தாலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு அமெரிக்காவுடனான எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது என பிரதமர்  கூறினார். எல்லையின் இருபுறமும் தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் எல்லை பயணங்களை மீண்டும் திறக்கும் திட்டத்திற்கான அழைப்புகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. 

கனடாவுடனான எல்லையை எப்போது அல்லது எப்படி மீண்டும் திறப்பது என முடிவு செய்யவில்லை என்று வெள்ளை மாளிகை கடந்த வாரம் கூறியது. எந்தவொரு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவும் கனேடியர்கள் பாதுகாப்பை மனதில் கொண்டு செய்யப்பட வேண்டும் என திங்கட்கிழமை Trudeau கூறினார்.

Related posts

முஸ்லிம் குடும்பம் மீதானது ஒரு பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் Trudeau

Gaya Raja

2022இல் இதுவரை 107 இறப்புகள் Ontario நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளன

அறிவிக்கப்பட்டது Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை

Gaya Raja

Leave a Comment