கனடா அடுத்த வாரம் 34 இலட்சம் Pfizer தடுப்பூசிகளை பெறவுள்ளது.
கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த அறிவித்தலை வெளியிட்டார். May மாதம் 24ஆம் திகதிக்கான தடுப்பூசியின் விநியோகத்தை Pfizer நிறுவனம் May மாதம் 17ஆம் திகதி அனுப்பி வைக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் அதிகரித்த Pfizer தடுப்பூசிகளை கனடா பெறவுள்ளது.
அடுத்த வாரம் 11 இலட்சம் Moderna தடுப்பூசிகளும் கனடாவை வந்தடையவுள்ளன. இதன் மூலம் கனடாவுக்கு மொத்த 45 இலட்சம் Moderna தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளது.
June மாதம் முடிவடையும் தடுப்பூசி விநியோகத்தின் இரண்டாவது காலாண்டில், கனடா மொத்தம் 242 இலட்சம் Pfizer, 103 முதல் 123 இலட்சம் Moderna, 44 இலட்சம் வரை AstraZeneca தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளும் என கூறப்படுகின்றது.