Ontario புதன்கிழமை தொடர்ந்து எட்டாவது நாளாகவும் 1,500க்கும் அதிகமான COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.
புதன்கிழமை Ontarioவில் 1,571 தொற்றுக்களும் 10 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. 1,531 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரம் வரையிலான 000 சோதனைகள் நிறைவடைந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து Ontarioவில் அதிகரித்து வருகின்றது. தொடர்ந்தும் 893 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 333 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என விபரங்கள் வெளியாகின. Ontarioவில் இதுவரை 333,690 தொற்றுக்களும் 7,263 மரணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.