வசந்த கால விடுமுறையில் பயண சோதனைச் சாவடிகளை அமைப்பது குறித்து Quebec மாகாண அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது.
Quebecகிற்குள்ளும் ஏனைய மாகாணங்களுக்கு இடையிலும் இந்த பயண சோதனைச் சாவடிகள் அமையும் என கூறப்படுகின்றது. வசந்த கால விடுமுறையில் புதிய பொது சுகாதார விதிகள் அமுல்படுத்தப்படலாம் என நேற்று மாகாண அரசாங்கம் குறிப்பிட்ட நிலையில் இன்று (புதன்) இந்த அறிவித்தல் வெளியானது
இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என Quebec மாகாணத்தின் பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று தெரிவித்தார். தொற்று பரவலை தடுக்கும் விடயத்தில் அரசாங்கம் எச்சரிக்கையுடன் உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்