தேசியம்
செய்திகள்

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்காவில் இருந்து நில எல்லை வழியாக கனடாவுக்கு வருபவர்கள் எதிர்மறையான COVID சோதனை முடிவை கொண்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அமெரிக்காவின் நில எல்லை வழியாக கனடா வரும் எவரும் தொற்றுக்கு சோதிக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் கூறினார்

இந்த மாதம் 15ஆம் திகதி  முதல் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் என பிரதமர் அறிவித்தார். COVID தொற்றின் பரவலை கனடாவுக்குள் தடுக்கும்  அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையாக இந்த அறிவித்தல் வெளியானது.

கனடாவிற்கு விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளும் January மாதம் ஆரம்பம் முதல் எதிர்மறையான  PCR சோதனை கொண்டிருக்க வேண்டும் என்ற நடைமுறை கனடாவில் அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Towing Truck துறையில் ஊழல் குற்றச்சாட்டு – தமிழரும் ஒருவராம்: OPP

Lankathas Pathmanathan

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

Toronto கல்விச் சபை பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுகின்றன!

Gaya Raja

Leave a Comment