தேசியம்
செய்திகள்

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Ajax நகரில் வார விடுமுறையில் தமிழர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (15) அதிகாலை 2 மணியளவில் இந்த கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்தது.

வாகன நிறுத்துமிடத்தில் வாக்குவாதம் ஒன்றின் போது ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணமடைந்தார்.

28 வயதான மரணமடைந்தவரின் பெயர் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் வெளியிடப்படவில்லை என ஞாயிற்றுக்கிழமை (16) மாலை வெளியான செய்தி குறிப்பில் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர் தமிழர் என தெரிவிக்கப்படுகிறது.

கத்திக் குத்து சம்பவத்தை தொடர்ந்து, அதே வாகன நிறுத்துமிடத்தில் சந்தேக நபர் வாகனத்தால் மோதப்பட்டுள்ளார்.

அவர் மருத்துவமனையில் உயிர் ஆபத்தற்ற நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Ajax நகரை சேர்ந்த 33 வயதான இவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை Longueuil நகர முதல்வர் வெளிப்படுத்தினார்

Lankathas Pathmanathan

சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதியை தாமதப்படுத்தும் Quebec!

Gaya Raja

தொடரும் வருமான வரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment