December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் இன்று (புதன்) ஆரம்பமாகியுள்ளது.

இன்று முதல் கனடா சர்வதேச மாணவர்களுக்கான புதிய பணி அனுமதி திட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது. கனடாவில் அதிகமான மக்களை நிரந்தரமாக குடியேற வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மாத ஆரம்பத்தில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்திருந்தது.

முதுகலை பட்டப்படிப்பு பணி அனுமதி பெற்ற முன்னாள் மாணவர்கள் காலாவதியான அல்லது விரைவில் காலாவதியாகும் அனுமதித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என குடிவரவு அமைச்சர் Marco Mendicino கூறினார். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வேலை தேடுவதற்காக கனடாவில் 18 மாதங்கள் வரை தங்க இந்த திட்டம் வழி வகுக்கின்றது.

இந்தத் திட்டத்தினால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் பயனடையலாம் என மதிப்பிடுகின்றது.

Related posts

Markham நகரில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan

$58 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு வெற்றியாளர்!

Lankathas Pathmanathan

Leave a Comment