அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Whitby நகரில் Durham பிராந்திய காவல்துறையினரின் நடவடிக்கை ஒன்றில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமை பின்னிரவு 11:30 மணியளவில் வாகனம் ஒன்றை நிறுத்திய காவல்துறையினர் அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்களை கைது செய்துள்ளனர்.
Torontoவை சேர்ந்த 29 வயதான பிரதீப் பரமநாதன், Torontoவை சேர்ந்த 27 வயதான சஜித் செல்வநாதன், Oshawaவை சேர்ந்த 39 வயதான கஜன் அப்பாத்துரை ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.