September 11, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 9ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கனடிய சமஷ்டி அரசு கோவிட் – 19 தொற்று நோய் குறித்த தேசிய மட்ட எதிர்வு கூறல்களைக் காட்டும் உருப்படிவங்களை (modelling) இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டது. வைரஸின் நடத்தை குறித்து அறிந்துள்ள விடயங்களையும், பொதுச் சுகாதார நடவடிக்கைகள் ஏற்படுத்தக் கூடியமாற்றங்களையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதங்களில் இந்தத் தொற்று நோய் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்து மென்பதைக் காண்பிப்பதற்கு இந்த உருப்படிவங்கள் முற்படுகின்றன. கனடாவில் ஏப்ரல் 16 ஆந் திகதியளவில் 22,580 முதல் 31,850 வரையானோர் தொற்றுக்கு உள்ளாவார்களெனவும், 500 முதல் 700 வரையானோர் மரணமாவார்களெனவும் குறுகிய கால எதிர்வு கூறல்கள் குறிப்பிடுகின்றன. பொதுச் சுகாதார நடவடிக்கைகளினதும், சுகாதாரப் பராமரிப்புப் பொறிமுறையின் அதிகரித்த வல்லமையிலும் தங்கியிருக்கும் நீண்டகால எதிர்வு கூறல்கள் பாரிய அளவில் வேறுபடுகின்றன.

கனடியர்களுக்கு இன்று உரையாற்றிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் தெரீசாராம் (Theresa Tam) வெளியிட்ட பின்வரும் கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்: கோவிட் – 19 பல நாடுகளில் பரவிய பின்னர் தாமதமாகவே கனடாவை வந்தடைந்தது, கனடாவில் நோய்ப் பரவல் தற் போதும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது, அத்துடன் எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்தலாமென முடிவெடுப்பதற்கான சந்தர்ப்பம் கனேடியர்களுக்குத் தற்போதும் உள்ளது. வளைவின் தற்போதைய போக்கைக் கருதும் போது, அதன் உச்சம் வசந்த காலத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்டு, முதல் பரவல் அலை கோடை காலத்தில் முடிவுக்கு வரக் கூடும். தடுப்பு மருந்தொன்று கண்டுபிடிக்கப்படும் வரை, முதல் அலையின் பின்னரான மாதங்களில் சிறிய அளவில் வைரஸ் பரவும் நிகழ்வுகள் ஏற்படுமெனவும் மருத்துவர் தெரீசாராம் முன்னெச்சரிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். கோவிட் – 19 காரணமான மரணங்களின் எண்ணிக்கையை 4,000 முதல் 44,000 என்ற அளவுக்குள், இயலுமான அளவுக்குக் குறைவாகப் பேணுவதற்குக் கனேடியர்கள் பொதுச் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டுமெனப் பிரதம மந்திரி ட்ரூடோ கனேடியர்களிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.

கோவிட் – 19 உலகத் தொற்று நோயென அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாகக் கனடா புள்ளி விபரப் பிரிவு தேசிய வேலை வாய்ப்புப் புள்ளி விபரங்களை இன்று வெளியிட்டது. பல மாகாணங்களும், உள்ளுராட்சி அமைப்புக்களும் அவசர கால நிலையைப் பிரகடனம் செய்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் வேலை வாய்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனால் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடியர்களின் நிலைமை மேம்படும் வரை அரசு ஆதரவளிக்குமெனப் பிரதம மந்திரி ட்ரூடோ கனேடியர்களுக்கு உறுதியளித்தார்.

கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுத் திட்டம் ஏப்ரல் ஆறாந் திகதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 4.5 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 4.5 மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் ஏற்கனவே இந்த மாதத்திற்குரிய அவர்களது 2000 டொலரைப் பெற்றுள்ளார்கள். வேலை கொள்வோர் பணியாளர்களை வேலை நீக்காதிருப்பதற்கு உதவியாகச் சம்பளமானியத்துக் கான சட்ட மூலத்தை அரசு தயாரித்து வருகிறது. சிறு வணிக நிறுவனங்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களை வழங்கும் கனடா அவசர வணிகக் கணக்குக் கடன் திட்டம் (Canada Emergency Business Account Loan) இன்று ஆரம்பமாகியுள்ளது. கோவிட் – 19 நிதி உதவிகளின் ஒரு அங்கமாக, பெரியவர்களுக்கு 300 டொலர் வரையான தொகையாலும், சிறுவர்களுக்கு 150 டொலர் வரையான தொகையாலும் அதிகரிக்கப்பட்ட ஜீஎஸ்ரிவரி மீளளிப்பு, தகுதி பெற்ற வருமானம் குறைந்த கனேடியர்களுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.

உலகப் போர்களின் பின்னர் கனடா எதிர் கொண்ட மிகப் பெரும் நெருக்கடியாக கோவிட் – 19 விளங்குகிறது. விமிறிட்ஜ் (Vimy Ridge) சமரின் 103 ஆவது ஆண்டு நினைவு தினமான இன்று, கனடாவின் பலம், ஒற்றுமை ஆகியவற்றையும், இன்று சமாதானம் நிலவும் நாட்டில் நாம் வாழ்வதற்காக அந்தச் சமரின் போது கனேடியர்கள் புரிந்த வீரத்தியாகங்களையும் பிரதம மந்திரி ட்ரூடோ நினைவு கூர்ந்தார். விமிறி ட்ஜ்சமரில் பதுங்கு குழிகளில் பணியாற்றிய கனேடியர்களினதும், தற்போது முன் வரிசையில் உள்ளதாதிகள், மருத்துவர்கள் ஆகிய கனேடியர்களினதும், சக கனேடியர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்காகத் தமது உயிர்களை அபாயத்துக்குள்ளாக்கும் அனைத்துக் கனேடியர்களினதும் முயற்சிகளைப் பிரதம மந்திரி நினைவுபடுத்தினார். நிலைமை மேம்படுமெனவும், கோவிட் – 19 வைரஸைத் தோற்கடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனேடிய அரசு எடுக்கு மெனவும், நெருக்கடியான இந்தக் கால கட்டத்தில் கனடியர்களுக்கு ஆதரவளிக்குமெனவும் அவர் உறுதியளித்தார்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on April 9th

Today, the Government of Canada released national-level modelling on the COVID-19 epidemic in Canada. The modelling attempts to show how the epidemic might unfold over the coming months based on the knowledge of how the virus behaves and the potential impact of public health measures. Short-term projections estimate 22,580 to 31,850 cases and approximately 500-700 deaths by April 16 in Canada. Longer term projections vary widely based on the type and strength of Public Health measures and the enhanced capacity of the health care system.

Prime Minister Justin Trudeau in addressing Canadians today, reiterated the message shared  by Dr. Theresa Tam, Chief Medical Officer of Canada; that as COVID-19 arrived in Canada later than many other countries, Canada is still in an earlier stage of the outbreak, and that Canadians still have the chance to determine how the spread can be controlled in the weeks and months to come. Based on current trajectory, the initial peak – the top of the curve – may be in late spring, with the end of the first wave in the summer. Dr.Tam also cautioned there willlikely be smaller outbreaks for a number of months after that until a vaccine is developed. Prime

Minister Trudeau, encouraged Canadians to strongly adhere to the recommendations of public health officials so that the death numbers due to COVID-19 can be kept as low as possible – between 4,000 and 44,000.

Statistics Canada, today released the first national employment numbers since the COVID-19 pandemic declaration. With a number of provinces and municipalities having declared a State of Emergency, the employment numbers were reported to be reduced by 1 million for the month of March. Prime Minister Trudeau, reassured Canadians that the government will continue to support Canadians bridge to better times.

Since the Canada Emergency Response Benefit was launched on Monday, April 6th, over 4.5 million claims have been processed – meaning over 4.5 million Canadians have already received their $2000 for this month. The government continues to work on legislation to bring in a wage subsidy to help employers keep people on the payroll. The Canada Emergency Business Loan which offers guaranteed loans to small businesses has been launched today. The GST Tax Credit, which has been supplemented by upto $300 per adult and $150 per child as part of COVID-19 economic measures will also be sent to eligible low income Canadians today.

The COVID-19 crisis is the worst crisis faced by Canada since the World Wars. Today, on the 103rd anniversary of the Battle of Vimy Ridge, Prime Minister Trudeau reflected on the strength and unity of Canada and the brave sacrifices that Canadians made over a 100 years ago, so that we can have a peaceful country today. The Prime Minister recognized the efforts of Canadians, whether in the battle trenches during Vimy Ridge or the nurses and doctors on the front line today, and all Canadians who are putting their own lives at risk to keep fellow Canadians safe and healthy. He reassured Canadians that things will get better, and the Canadian government will pull all stops to beat the COVID-19 virus and to support Canadians through this difficult time.

Related posts

கனடாவில் COVID தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புதிய modelling விவரங்கள் சுட்டிக்காட்டு!

Gaya Raja

கனடாவின் முதலாவது சுதேச ஆளுநர் நாயகம் பதவியேற்றார்!

Gaya Raja

புகையிரத, விமான போக்குவரத்து சவால்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment