December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 1ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

வேலை வாய்ப்பைப் பாதுகாத்தல், வேலை நீக்கப்பட்ட பணியாளர்களுக்கு உதவியளித்தல், வணிக நிறுவனங்களுக்கு உதவியளித்தல் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்ட அரசின் பொருளாதார திட்டத்தின் விபரங்களைப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவும் சமஷ்டி அமைச்சரவை உறுப்பினர்களும் இன்று (புதன் கிழமை) வெளியிட்டுள்ளார்கள்.

வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கனடா வருமான வரி முகவரக இணையத் தளத்தின் புதிய இணையமுகப்பொன்றின் ஊடாகக் கனடா அவசர சம்பள மானியத்துக்கு (Canada Emergency Wage Subsidy) விரைவில் விண்ணப்பிக்கலாமென நிதியமைச்சர் பில்மோர்னோ (Bill Morneau) தெரிவித்தார். லாப நோக்கற்ற நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் – உணவுச் சாலைகள், மதுபானச் சாலைகள் போன்ற விருந்தோம்பல் துறை நிறுவனங்கள் உட்பட்ட வணிக நிறுவனங்களும் சம்பள மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். கடந்த ஆண்டின் அதே காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது ஆகக் குறைந்தது 30 சத வீதமான வருமான இழப்பைச் சந்தித்த நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த திகதியில் இருந்து 6 வாரங்களுக்குள் பணம் வழங்கப்படும்.

திறைசேரிச் சபையின் தலைவர் (President of the Treasury Board) ஜோன் ஈவ்டுக்ளோவும் (Jean-Yves Duclos), வேலைவாய்ப்பு, பணியணி மேம்பாடு, மாற்று வலுவுள்ளோரை உள்ளடக்குதல் துறையின் (Employment, Workforce Development and Disability Inclusion) அமைச்சா் கார்ளாகுவல்ட்றோவும் (Carla Qualtrough) கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit (CERB)) தொடர்பான விபரங்களை அறிவித்தார்கள்:

  • Canada.ca/Coronavirus-CERB என்ற இணையப் பக்கத்தில் புதிய இணைய முகப்பொன்று இன்று அறிமுகம் செய்யப்படுகிறது
  • CERB இக் கான விண்ணப்பங்கள் ஏப்ரல் ஆறாந் திகதியில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படும்
  • அதிகளவான விண்ணப்பங்களை ஏற்பதற்கு வசதியாக, ஆரம்பத்தில் விண்ணப்பங்கள் விண்ணப்பதாரரின் பிறந்த மாதத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்படும்:

– ஜனவரி, ஃபெப்ரவரி, மார்ச் மாதங்களில் பிறந்தோர் – ஏப்ரல் 6 (அல்லது திங்கட் கிழமைகளில்)

– ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பிறந்தோர் – ஏப்ரல் 7 (அல்லது செவ்வாய்க் கிழமைகளில்)

– ஜூலை, ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் பிறந்தோர் – ஏப்ரல் 8 (அல்லது புதன் கிழமைகளில்)

– ஒக்ரோபர், நொவம்பர், டிசம்பர் மாதங்களில் பிறந்தோர் – ஏப்ரல் 9 (அல்லது வியாழக் கிழமைகளில்)

– வெள்ளி, சனி, ஞாயிறுக் கிழமைகளில் அனைவரும் விண்ணப்பிக்கலாம்

  • விண்ணப்பம் செய்யப்பட்ட திகதியின் பின்னர் – நேரடி வைப்பாக இருந்தால் 3 முதல் 5 நாட்களுக்குள்ளும், தபால் மூலமான காசோலையாக இருந்தால் 10 நாட்களுக்குள்ளும், பணம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரிகள் அவர்களது வேலை வாய்ப்பு நிலையை மாதந்தோறும் அறிவிக்க வேண்டியிருக்கும்
  • வேலைக் காப்புறுதிக்கு (EI) ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் CERB இற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை
  • சம்பள மானியத்தைப் பெறாத விண்ணப் பதாரிகளுக்கு மட்டும் CERB வழங்கப்படும்

கனடிய பொருளாதாரத்திற்கு மேலதிக உதவிகளை வழங்குவது குறித்து ஆராயப்படுவதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உத்தரவாதம் வழங்கினார். கோவிட்-19 தொடர்பான அவசர பொருளாதாரத் திட்டம், கனடாவின் வரலாற்றில் இதுவரை செயற்படுத்தப்படாத மிகப் பெரும் பொருளாதார திட்டமாக அமைவதால், நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது குறித்து ஏனைய கட்சிகளுடன் ஆராயுமாறு அரசின் சபை முதல்வரிடமும், துணைப் பிரதம மந்திரியிடமும் பிரதமர் கேட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தனை விரிவான குடிசார் அணி திரட்டல் கனடாவில் இடம் பெறும் நிலையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மட்ட அரசுகளும் கனேடியர்களுக்கான அவற்றின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவற்றின் செயற்பாடுகளைப் படி உயர்த்தியுள்ளதாகப் பிரதமர் உறுதியளித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் கனடியர்கள் கோவிட் – 19 ஐத் தோற்கடிப்பதற்கான கடமையைச் செய்வதற்காக வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமெனவும், புத்தி சாதூரியமான வகையில் செயற்பட வேண்டு மெனவும், கனடாவுக்கும், ஏனையோருக்கும் உதவி புரியும் வகையான முடிவுகளை எடுக்க வேண்டு மெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Updated Emergency Measures by the Canadian Federal Government on April 1st 

 

Prime Minister Justin Trudeau and members of the Federal cabinet announced the details of the government’s three-point economic plan to protect jobs, help people laid off, and support businesses today (Wednesday).

Minister Bill Morneau, Minister of Finance announced that the Canada Emergency Wage Subsidy will be soon available for business owners to apply through a new portal on the Canada Revenue Agency website. All non-profits, charities and businesses – including those in the hospitality sector such as restaurants and bars will be able to apply for the wage subsidy. The subsidy will cover the months of March, April and May will be available to businesses who have experienced a minimum of 30% revenue loss compared to the same period last year. Once applied the funds will be available within 6 weeks.

Regarding the Canada Emergency Response Benefit (CERB) Ministers Jean-Yves Duclos, President of the Treasury Board, and Minister Carla Qualtrough, Minister of Employment, Workforce Development and Disability Inclusion have announced:

  • A new portal will be launched today at, Canada.ca/Coronavirus-CERB
  • Applications for the CERB will be open starting April 6th
  • To accommodate high volume of application, initial intake of the application will vary based on the birth month of the applicant:

○ January, February, March birth months – April 6th (Or on Mondays)

○ April, May, June birth months – April 7th (Or on Tuesdays)

○ July, August, September birth months – April 8th (Or on Wednesdays)

○ October, November, December birth months – April 9th (Or on Thursdays)

○ Open for all to apply – (Friday, Saturdays and Sundays)

  • Upon application, payments will be made within 3 to 5 days for Direct Deposit and 10 day for mailed in cheque.
  • Applicants will be required to check in monthly to update their employment status for the application
  • Those who have applied for Employment Insurance already, do not need to reapply for CERB
  • The CERB will only be available to applicants not receiving the Wage Subsidy. Prime Minister Justin Trudeau reassured that further supports for the Canadian economy is being worked on. The COVID-19 emergency economic plan is the largest economic program in Canada’s history, therefore, the Prime Minister has requested the House Leader and the Deputy Prime Minister to reach out to other parties about reconvening the Parliament.

With Canada facing a civic mobilization to this extent for the first time since the Second World War, Prime Minister Trudeau reassured that governments of all levels across the country are stepping up to fulfill their responsibilities to Canadians. He also called on Canadians to fulfil their responsibility to defeat COVID-19 by staying home; to be smart about what they do, and their choices – to serve Canada and serve each other during this difficult time.

Related posts

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலைகளில் கனடாவின்பங்கு குறித்து  விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

புதன்கிழமை ஆரம்பமாகும் Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment