தேசியம்
செய்திகள்

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

கோவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்திற்குத் தொழிற் துறையை அணி திரட்டும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ இன்று (செவ்வாய்) அறிவித்தார். தேவைப்படும் மருத்துவ உபகரணங்களுடனும், ஏனைய பொருட்களுடனும் நோய்ப் பரம்பலை எதிர் கொள்ளும் கனடாவின் வல்லமையை இது பலப்படுத்துகிறது.

நோயைக் கண்டறியும் பரிசோதனைகளுக்கு உதவியாகவும், சுவாச உதவிக் கருவிகள், தனி நபர் பாதுகாப்புக் கருவிகள் போன்றவற்றை மாகாணங்கள், பிராந்தியங்களுடன் இணைந்து மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கும் கனடிய அரசு 2 பில்லியன் டொலரைச் செலவிடுகிறது.

மிகவும் அவசியமாகத் தேவைப்படும் மருத்துவத் துறைப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு வணிக நிறுவனங்களும், உற்பத்தித் தொழிற் துறையினரும் உதவி புரிய வேண்டுமெனக் கனடிய அரசு 2020ஆம் ஆண்டு மார்ச் 20ஆந் திகதி கோரிக்கை விடுத்தது. நாட்டில் தேவையாகவுள்ள தனி நபர் பாதுகாப்புக் கருவிகளையும், அதி முக்கியமான மருத்துவ பொருட்களையும் பெற்றுக் கொள்வதற்குத் தமது நிபுணத்துவத்தையும், வல்லமையையும் வழங்க முன் வந்த சுமார் 3000 கனடிய நிறுவனங்களுடன் அன்றைய தினத்தின் பின்னர் அரசு பேசியுள்ளது.

இடத்துக்கிடம் கொண்டு செல்லக் கூடிய சுவாச உதவிக் கருவிகள் (portable ventilators), மருத்துவ முகக் கவசங்கள் (surgical masks), விரைவான பரிசோதனைகளை நடத்துவதற்கான பொறிகள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும், அவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் கனேடிய அரசு Thornhill Medical, Medicom, Spartan Bioscience ஆகிய கனடிய நிறுவனங்களுடன் புதிய கொள்வனவு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. மருத்துவ சிகிச்சை நிலையங்கள் மீது நிலவும் அழுத்தத்தைக் குறைப்பதற்குப் பலமில்லியன் பொருட்களைக் கொள்வனவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலதிக பரிசோதனைப் பொறிகள் (test kits), கைகளைத் துப்பரவாக்கும் பதார்த்தம் (hand sanitizer), முகக் கவசங்களையும், அங்கிகளையும் உள்ளடக்கிய பாதுகாப்பு ஆடைகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நோக்கத்தை  வெளிப்படுத்தும் கடிதங்களில் Precision Biomonitoring, Fluid Energy Group Ltd, Irving Oil, Calko Group, Stanfield’s ஆகிய ஐந்து நிறுவனங்களுடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.

கோவிட்-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் அணி திரளுமாறு அரசு விடுத்த அறை கூவலுக்குப் பதிலளித்துள்ள ஏனைய நிறுவனங்களினதும், தொழற்துறைகளினதும் ஒத்துழைப்பை அரசு வரவேற்கிறது.

இதற்காகத் தமது தொழிற்சாலைகளை வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும், உற்பத்தி வல்லமையை இரு மடங்காக அதிகரிப்பதற்கும், ஏற்கனவே இருக்கும் கருவிகளையும், பொருட்களையும் சேகரித்து நன் கொடையாக வழங்குவதற்கும், விரைவாக பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏனையோருடன் சேர்ந்து செயற்படுவதற்கும் இதைப் போன்ற வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. Magna, General Motors, Toyota Motor Manufacturing Canada, Ford, Linamar, Shell, Suncor, Alibaba Group, The Home Depot போன்றன தனி நபர் பாதுகாப்புக் கருவிகளையும், துப்பரவாக்கும் பொருட்களையும் நன் கொடையாக வழங்கிக் கனடிய சுகாதாரத் துறையினருக்கு உதவியளித்துள்ளன.

இதற்கு மேலதிகமாக புதியவையும், தேவையாகவுள்ளவையுமான தொழில் நுட்பங்கள், கருவிகள், மருத்துவ பொருட்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கும், அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கும் Next Generation Manufacturing Supercluster இன் உறுப்பினர்களுக்கு 50 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. கனடியர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நொவெல் வைரஸைக் கண்டுபிடிக்கும் பரிசோதனைகள், தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள், நோயின் குணங் குறிகளுக்கான சிகிச்சை போன்றவற்றை உருவாக்க இது பயன்படும். கனடியர்களுக்குத் தேவையான சுவாச உதவிக் கருவி (ventilators), உப கருவிகள், தனி நபர் பாதுகாப்புக் கருவிகள், சுத்தப்படுத்தும் மற்றும் கிருமி நீக்கும் இராசாயனப் பதார்த்தங்களும், கருவிகளும் இதில் உள்ளடங்குகின்றன.

கனடியர்களைப் பாதுகாத்து, வைரஸ் பரம்பலைத் தடுக்கும் கனேடிய அரசின் விரிவான மூலோபாயத்தின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. கனடிய உற்பத்தித் தொழிற் துறை, புத்தாக்க முயற்சிகள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து செயற்படுவது இந்த மூலோபாயத்தின் ஒரு  முக்கியமான பகுதி. இது கனடியர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதுடன், சவால்களை எதிர் கொள்ளக் கூடிய சுகாதாரத் துறையையும் உருவாக்கும்.

Updated Emergency Measures by the Canadian Federal Government on March 31st

The Prime Minister, Justin Trudeau, today (Tuesday) announced progress under Canada’s Plan to Mobilize Industry to fight COVID-19, which increases Canada’s ability to respond to the outbreak with necessary medical equipment and supplies.

The Government of Canada is investing $2 billion to support diagnostic testing and to purchase ventilators and protective personal equipment, including for bulk purchases with provinces and territories. Personal protective equipment includes things like more masks and face shields, gowns, and hand sanitizer.

On March 20, 2020, the Government of Canada called on Canadian businesses and manufacturers to help deliver critical health supplies. Since then, the government has spoken directly with almost 3,000 Canadian companies that have offered their expertise and capacity to meet the country’s need for personal protective equipment and critical health supplies.

The Government of Canada has signed new procurement agreements with Canadiancompanies Thornhill Medical, Medicom, and Spartan Bioscience to purchase and boost capacity to manufacture equipment and supplies including portable ventilators, surgical masks, and rapid testing kits. The government has ordered millions of supplies to ease the pressure on health care facilities. It has also signed letters of intent with five companies – Precision Biomonitoring, Fluid Energy Group Ltd., Irving Oil, Calko Group, and Stanfield’s – to produce additional test kits, hand sanitizer, and protective apparel including masks and gowns.

The government welcomes the cooperation of other companies and industries that have answered the call to action and offered their support in the fight against the COVID-19 pandemic. This includes efforts from companies to re-tool their facilities and double their production capacity, to collect and donate existing supplies and equipment, and to combine resources to manufacture needed supplies more quickly. Companies like Magna, General Motors, Toyota Motor Manufacturing Canada, Ford, Linamar, Shell, Suncor, Alibaba Group, and The Home Depot have helped Canada’s health care professionals by donating personal protective and safety equipment and sanitizing supplies.

In addition, $50 million has been made available in funding for members of the Next Generation Manufacturing Supercluster to develop and scale-up new, in-demand technologies, equipment, and medical products. This includes technologies and products to test and treat Canadians, such as novel virus detection tests, vaccines, therapeutics, and symptom management treatments. It also includes medical equipment to care for Canadians, such as ventilators, peripherals, personal protective equipment, and cleaning and sterilization chemicals and equipment.

These measures are part of the larger strategy the Government of Canada is implementing to protect Canadians and prevent the spread of the virus. Collaboration with Canadian manufacturing and innovation is an important part of this strategy, which will ultimately result in better health and safety for Canadians, as well as a more resilient health care system.

Related posts

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja

பணவீக்க சரிவு கனடியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்: நிதியமைச்சர்

Lankathas Pathmanathan

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Lankathas Pathmanathan

Leave a Comment