COVID-19 உலகளாவிய பெருந் தொற்று நோய்க்கு எதிராகக் கனடா நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், பிரதமர் Justin Trudeau இன்று (சனிக்கிழமை) பின்வரும் விடயங்களை அறிவித்தார்:
- வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனடியர்களை மீட்டு வரும் முதல் தொகுதி விமானங்கள் இந்த வார இறுதியில் கனடாவை வந்தடையவுள்ளன. இந்த நாடுகள் வழங்கிய சிறப்பு அனுமதியும், விமான சேவை நிறுவனங்களின் இணக்கமும் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.
– Moroccoவில் இருந்து வரும் விமானம் இன்றிரவு தரையிறங்கும்.
– பெருந் தொகையான கனடியர்கள் சிக்கியிருக்கும் Spain, Peru உட்பட்ட நாடுகளில் இருந்து வரவுள்ள விமானங்கள் குறித்த விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
– பயணிகள் நியாயமான, வழமையான கட்டணத்தைச் செலுத்துமாறு கோரப்படும்.
அதே வேளை, மீட்பு விமான சேவைகளுக்கான மேலதிகமான செலவினத்தை அரசு ஏற்றுக் கொள்ளும்.
- வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் கனடியர்கள் அவர்களது பெயர்களை வெளிநாடுகளில் உள்ள கனடியர்களின் தேசிய பதிவேட்டில் (www.voyage2.gc.ca) இது வரை பதிந்திருக்காவிட்டால், அதில் பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.
- கனடாவுக்குத் திரும்பி வரும் அனைவரும், அவர்கள் தனிப்பட்ட முயற்சி மூலம் திரும்பினாலும், அரசு ஏற்பாடு செய்யும் விமானங்கள் மூலம் திரும்பினாலும் 14 நாட்கள் தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டு மென எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
- கனடாவின் வடக்கில் உள்ள பகுதிகளில் COVID-19 பரம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், வட பகுதிச் சமூகங்களுடன் சேர்ந்து கனடிய அரச செயற்பட்டு வருகிறது. இதற்காக பின்வருபவற்றை உள்ளடக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன:
– வட பகுதிச் சமூகங்களுக்கான பயணிகளைக் குறைத்தல்.
– பொருட்களும், சேவைகளும் அங்கு கிடைப்பதை உறுதி செய்தல்.
இன்றைய நாள், இன ரீதியிலான பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் என்பதை நினைவுபடுத்திய பிரதமர், அச்சம், இனவாதத்தையும், பாகுபாட்டையும் அதிகரிக்கு மென்பதால், அச்சம், தவறான தகவல்கள், அவப் பெயர் சூட்டுதல் என்பவற்றுக்கு எதிராகச் செயற்படுவதற்கு விழிப்புடன் இருக்க வேண்டு மெனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு மேதிகமாக, குடிவரவு, அகதிகள், குடியுரிமை ஆகியதுறைகளின் அமைச்சரான Marco Mendocino கனடாவுக்குள் பிரவேசிப்பதற்கான தடைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளார்:
- இன்றில் (சனிக்கிழமை) இருந்து:
– 2020 March 16ஆந் திகதிக்கு முன்பாக அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களும், மாணவர்களும் கனடாவுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.
– 2020 March 16ஆந் திகதிக்கு முன்பாக நிரந்தர வதிவிட உரிமைக்கான அங்கீகாரத்தைப் பெற்ற அனைவரும் கனடாவுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும்.
கனடிய குடி மக்கள், நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள், அவர்களது வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் ஆகியோருக்கு மட்டுமே COVID-19 காரணமான பயணத் தடையில் இருந்து இது வரை விலக்களிக்கப்பட்டிருந்தது.
Updated Emergency Measures by the Canadian Federal Governmenton March 21st
Prime Minister Justin Trudeau highlighted the following updates today (Saturday), as Canada continues to address the COVID-19 pandemic:
- The first Rescue flights repatriating Canadians stranded in other countries will be landing in Canada this weekend. This has been made possible by special permission from the respective countries and in agreement with airline companies.
- The first flight from Morocco – will be landing tonight.
- Over the coming days, flights from other countries where a large number ofCanadians are stranded will be announced – including for Spain and Peru.
- The government will be undertaking additional costs for the rescue flights, whiletravellers will be asked to pay a responsible normal fare amount.
- Canadians who are stranded overseas are requested to register with the National Registry of Canadians Abroad If they have not already done so at: www.voyage2.gc.ca
- All returnees to Canada, whether it is by independent travel or on the government organized flights are expected to Self-isolate for 14 days.
- The federal government is also working with Northern communities to reduce the spread of
COVID-19 there, including by working with partners to:
- Reduce travellers to the Northern communities.
- Maintain accessibility of goods and services there.
The Prime Minister also acknowledged today as International Day of Elimination of Racial discrimination, sharing the message that as fear fuels racism and discrimination, Canadians need to remain vigilant tofight fear, misinformation and stigma during this time.
Minister Marco Mendocino, Minister of Immigration, Refugees and Citizenship has also updated the current travel restrictions for those entering Canada:
- As of today (Saturday), Canada will allow:
- Temporary Foreign Workers and Students who received their permits before March16th, 2020 to travel to Canada;
- All who have been approved for Permanent Residency before March 16th, 2020, totravel to Canada.
This exemption is in addition to Canadian Citizens, Permanent Residents and their spouse/partner or children who were the only ones previously allowed to travel due to the COVID-19 travel restrictions.