December 12, 2024
தேசியம்
செய்திகள்

புதன்கிழமை கனடாவில்…..

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

 

மத்திய அரசாங்கத்தின் நிதி உதவி

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடிய மத்திய அரசாங்கம் மொத்தம் 82 பில்லியன் டொலர்கள்  நிதி உதவியை அறிவித்துள்ளது. கனடிய பிரதமர் Justin Trudeau இந்த அறிவிப்பை புதன் கிழமை வெளியிட்டார். கனடியர்களுக்கும் வணிகங்களுக்குமான நேரடி ஆதரவாக 27 பில்லியன் டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 55 பில்லியன் டொலர்கள் வரி ஒத்தி வைப்புகளும் பிரதமரினால் அறிவிக்கப்பட்டது. பிரதமரின் நிதி உதவி நடவடிக்கைகளில்: வரிகாலக் கெடு வைத் தள்ளி வைத்தல், கனடா குழந்தை நலத் திட்டத்தை அதிகரித்தல், சிறு வணிகங்களுக்கான ஊதிய மானியங்கள் ஆகியனவும் உள்ளடக்கியுள்ளது.

COVID-19 தொற்றின் தாக்கம் கனடிய  பொருளாதாரத்தில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை அறிய வழி இல்லை என கனடிய நிதி அமைச்சர் Bill Morneau தெரிவித்தார். பிரதமரினால் அறிவிக்கப்பட்ட நிதி உதவி ஒரு முதல் படி எனவும் நிதியமைச்சர் கூறினார். விமான போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளுக்கு கூடுதல் உதவி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

COVID-19 vs SARS

COVID-19 தொற்று நோய் இப்போது SARS தொற்றைவிட அதிகமான கனடியர்களை பாதித்துள்ளது. ஏறக்குறைய17 ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவை SARS தாக்கிய போது, ​​முடிவில் 438 பேர் கனடாவில் பாதிப்புக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் Toronto மற்றும் GTA பகுதியில் அடையாளம் காணப்பட்டனர். புதன் கிழமை நிலவரப்படி, கனடாவில் 650கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட அல்லது ஊகிக்கக் கூடிய COVID-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட SARS காரணமாக கனடாவில் 44 பேர் இறந்தனர். இதுவரை, COVID-19 காரணமாக கனடாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகின்றது.

தற்காலிகமாக மூடப்படும் கனடாஅமெரிக்கா எல்லை

கனடா -அமெரிக்கா எல்லையை தற்காலிகமாக மூடுவதை கனடிய பிரதமர் Justin Trudeau உறுதி செய்தார்.  அமெரிக்க ஜனாதிபதி Donald Trump இதனை உறுதிப்படுத்தினார். இரு நாடுகளும் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களை கட்டுப்படுத்தும் என பிரதமர் Trudeau கூறினார்.  முக்கியமான விநியோகங்களான உணவு, எரிபொருள், மருந்துகள் இதனால் பாதிக்கப்படாது என பிரதமர் Trudeau கூறினார். வேலைக்காக எல்லையை தாண்டுபவர்கள் இதனால் பாதிக்கப்படமாட்டார்கள் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்தின் அவசரகால திட்டம்

COVID -19 எதிரொலியாக தேசிய தலைமைக்கான அவசர நடவடிக்கை திட்டம் ஒன்றை கனடிய அரசாங்கம் வகுத்துள்ளது. பிரதமர் Justin Trudeau தனது கடமைகளை நிறைவேற்ற முடியாவிட்டால் துணை பிரதமர் Chrystia Freeland கனடாவின் செயல் பிரதமராக மாறுவார். பிரதமரின் மனைவி  COVID-19க்கு நேர்மறையாக சோதனை செய்த நாள் இந்த அவசர நடவடிக்கை திட்டத்தை பிரதமர் அலுவலகம் வகுத்துள்ளது. தொடர்ந்தும் சுய தனிமையில் உள்ள போதிலும் தானும் தனது குழந்தைகளும் கொரோனா வைரஸ் அறி குறியில்லாமல் இருப்பதாக பிரதமர் Trudeau  கூறினார்.

அடமானக் கொடுப்பனவு ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில் அடமானக் கொடுப்பனவுகளை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க அனுமதிப்பதாக கனடாவின் ஆறு மிகப் பெரிய வங்கிகள் அறிவித்துள்ளன. கனடியர்கள் அல்லது வணிக உரிமையாளர்கள் தங்கள் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் வங்கிகள் இந்த திட்டம் குறித்த விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் கூடும் Ontario மாகாண சபை

Ontario மாகாண அரசாங்கம் அவசரகால அமர்வுகாக சட்டமன்றத்தை மீண்டும் கூட்டுகின்றது. வியாழக்கிழமை 1மணிக்கு இந்த அவசரகால அமர்வு நிகழவுள்ளது. COVID-19 தொற்று நோய் தொடர்பாக இரண்டு அவசரகால சட்டங்களை நிறை வேற்ற சட்டமன்றம் மீண்டும் கூடவுள்ளது. இந்த இரண்டு அவசரகால சட்டங்களை நிறை வேற்ற எதிர்க் கட்சிகளின் ஏகமனதாக ஒப்புதல் எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்தது.  இந்த அமர்வில் சபாநாயகர் உட்பட மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 24 ஆகக் குறைக்க கட்சிகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

Quebec மாகாணத்தின் முதல் மரணம்

Quebec மாகாணத்தில் COVID-19 தொடர்பான முதல் மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் இந்த மரணத்தை உறுதிப்படுத்தினார். பலியானவர் அண்மையில் கனடாவை விட்டு வெளிநாடு ஒன்றிற்கு பயணம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என மாகாண பொது சுகாதார இயக்குனர் கூறினார்.

British Colombia மாகாணத்தில் அவசர கால நிலை

British Colombia மாகாணம் அவசர கால நிலையை அறிவிக்கின்றது. COVID-19 தொற்றுக்கு மத்தியில் பொது மக்களுக்கான சேவைகளைப் பராமரிக்க உதவும் வகையில் இந்த முடிவு டுக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்கள் நியாயமானது ;பிரதமர்

Gaya Raja

கனடிய நாடாளுமன்றம் நோக்கிய வாகனப் பேரணி

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் பேச்சுக்களில் ஈடுபடுவோம்: CUPE

Lankathas Pathmanathan

Leave a Comment